-த.சுபேசன்-
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய நிர்வாகத்தினர் நேற்றுமுன்தினம் கடமைகளை பொறுப்பேற்றனர்.
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும் தென்மராட்சி கலை கலாசார மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, தலைவராக தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியும், செயலாளராக முத்துலிங்கம் கோகுலனும், பொருளாளராக மருதை உதயகுமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிலையிலேயே அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.இதன் போது புதிய தலைவர்,செயலாளர், பொருளாளர் ஆகியோர் வர்த்தக சமூகத்தினர் கௌரவித்தனர்.


















