-த.சுபேசன்-
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

போராளிகள் நலன்புரிச் சங்கம், தென்மராட்சி மாவீரர் நாள் எழுச்சி ஏற்பாட்டுக் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களின் 35 பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.















