–த.சுபேசன்-
சாவகச்சேரி நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்தை தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஷ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மூவர் எதிர்த்தும் ஏனைய அனைவரும் ஆதரவளித்த நிலையில், 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.


















