-த.சுபேசன்-
தென்மராட்சி இலக்கிய அணி நடத்திய பாரதி விழா மற்றும் அண்மையில் அமரத்துவமடைந்த கவிஞர் த.நாகேஸ்வரனின் அஞ்சலி நிகழ்வும் என்பன சாவச்சேரியிலுள்ள தென்மராட்சி கலாசார மண்டபத்தில் கடந்த ஞாயிறுக்கிழமை இடம்பெற்றிருந்தன.
வலி தெற்கு உடுவில் பிரதேச செயலாளர் திருமதி பிரேமினி பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற இடம்பெற்ற இந்நிகழ்வில்
கவிஞர் த.நாகேஸ்வரனுக்கான அஞ்சலி உரையினை கம்பநேசன் ஆ.வாசுதேவா ஆற்றினார்.
இந்த அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து கம்பவாரதி ஈ.ஜெயராஜின் தலைமையில், ‘பாரதியிடம் இருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டியது இனப்பற்றையே அல்லது தேசப்பற்றையே’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற்றது.
இதில் பொதுமக்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















