-செ.ரவிசாந்-
புத்தளம், அம்மாதோட்டம் பள்ளிவாசல்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆறு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய விக்கிரகங்கள் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்டன.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று மேற்படி ஆலய நிர்வாகத்தினரிடம் புதிய விக்கிரகங்களைக் கையளித்தார்.


















