கிவுல் ஓயாத்திட்டமும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கலைத்துறை பீடத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் சிறப்புரையினை இரேனியஸ் அற்றவுள்ளார்.
இதில் தமிழ் மக்களின் அரசியல் நிலை, அதன் வரலாற்று பின்னணி மற்றும் தற்போதைய சவால்கள் குறித்து ஆழமான உரையாடல் இடம்பெறவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான அரசறிவியல் ஒன்றியம் கேட்டுள்ளது.


















