-பா.பிரதீபன்-
யாழ். போதனா வைத்தியசாலையில் ஊவு (Scan) பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த ஊவு (Scan) இயந்திரம் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று முதல் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
பழுதடைந்திருந்த காலப்பகுதியில், நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகம், இனி இடையூறு இன்றி ஊவு (Scan) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

















