யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 2 வீடுகள் முழுமையாகவும் 267 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அதேவேளை யாழ். மாவட்டத்தில் தற்போது 57 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 5 ஆயிரத்து 323 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
















