முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டாரவை ஜூலை மாதம் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி ஆளணியினருக்கான விசேட நிதியொதுக்கீட்டின்கீழ் உள்ள அரச நிதியை மோசடியான முறையில் கையாண்டு, சான்றுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருமை குறிப்பிடத்தக்கது.
















