சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றனர். அதனால் அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்களாகப் பெண்களே திகழ்கின்றனர்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் எனப் பல வழிகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது.
தற்காலத்தில் சமூக ஊடகங்கள் வருமான நோக்கத்துக்காகப் பிழையான கருத்துக்களைப் பரப்பி வருவதால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்

















