-அன்ரனி திலக்-
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இந்த வருட நாள் தொழிலுக்கான சீட்டிழுப்பு இடம்பெற்றது.
வருடத்தின் முதல் நாள் தொழிலை மேற்கொள்பவரை குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் வழக்கத்தின்; அடிப்படையில் சென்மேரிஸ் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட 45 மீனவர்கள் இந்த சீட்டிழுப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தவரான பேதுருப்பிள்ளை அன்ரனி விமலதாஸ் குலுக்கல் முறையில் வெற்றி பெற்று இந்த வருடத்திற்கான நாள் தொழிலை மேற்கொள்ளவுள்ளார்.
சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தால் ஒரு இலட்சம் ரூபா பணமும் குறித்த நபருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















