யாழ்ப்பாணம் – செம்மணிப் படுகொலை தொடர்பான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் கபிலன் தெரிவித்தார்.
குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் செம்மணிப் படுகொலை தொடர்பான விசாரணைகள் நீதித் துறையால் சுயாதீனமாக இடம்பெற்று வருவதாகவும், அரசாங்கத்திற்கு கூட அது முழுமையாக தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி மிக முக்கியமான சூத்திரதாரிகளை மறைக்கும் முகமாக சில வழிகளில் திசை திருப்புவதற்காக விடயங்கள் இடம்பெற்று வருவதாகவும் கபிலன் சுட்டிக்காட்டினார்.

















