-கஜிந்தன்-
‘செம்மணி உடனிருப்பு வேண்டுதல்’ என்ற தொனிப் பொருளில் செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் நேற்று வியாழக்கிழமை செம்மணி – அணையா தீபம் சுற்றுவட்டப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த அடையாளப் போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களின் மறைமாவட்ட ஆயர்கள், அருட்சகோதரர்கள் எனப் பல கத்தோலிக்க பிரமுகர்கள் பங்கெடுத்தனர். முன்னதாக அணையாதீப தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக, மனித புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயான நுழைவாயிலுக்கு சென்று அங்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


















