-பி.டிலக்ஷன்-
செம்மணி மனிதப் புதைகுழியில், 56 நாட்களைக் கொண்ட 3ஆம் கட்ட அகழ்ப்பணிகளுக்கான உத்தேச பாதீடு நேற்று நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கானது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று காலை 9 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
56 நாட்களைக் கொண்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடே நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் சமர்பிக்கப்பட்டது.
நிதி விடுவிக்கப்பட்டதன் பிற்பாடு மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற செம்மணி வழக்கு விசாரணயின்போது சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் முன்றாம் கட்ட அகழ்வுகளுக்கான எட்டு வாரங்களுக்கான பாதீடு நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நீதி அமைச்சினால் நிதி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், வருட இறுதியில் ஏற்பட்ட மழையுடனான காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகள் தாமதமானதால் நிதி திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


















