இலங்கை வரலாற்றில் அதிகூடிய மனித பேரவலம் நடைபெற்ற புதைகுழியாகவும் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான சாட்சியமாகவும் செம்மணி காணப்படுகின்றது.தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு திறவுகோலாக செம்மணி இருக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதை குழி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழ் மக்கள் மீது புரிந்த இனப்படுகொலையின் சாட்சியையும், இலங்கைக்கான அவமானத்தையும் பறைசாற்றுகின்ற இடமாக செம்மணி மனிதப் புதைப்புழி அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக குறுகிய நாட்களுக்குள் 380 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் அதிகூடிய மனித பேரவலம் நடைபெற்ற புதைகுழியாகவும் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான சாட்சியமாகவும் செம்மணி காணப்படுகின்றது. இந்த அவல நிலையையும் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலையையும் சர்வதேச சமூகம் இனியாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தந்தான் இந்த செம்மணி மனிதப் புதைகுழியில் இனம் காணப்பட்ட என்புத் தொகுதிகள் பறைசாற்றுகின்றன.
இன்னும் பல்லாயிரக்கணக்கான என்பத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த என்புத் தொகுதிகள் உலகத்தினுடைய மனசாட்சியை கிளறி விடுகின்ற களமாக இந்த செம்மணி மனித புதைகுழி காணப்படும். சர்வதேச சமூகமும் இந்த விடையத்தில் அதிகமான கரிசரணையை கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தருகின்ற ஒரு அணையாத இடமாக தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு திறவுகோலாக செம்மணி இருக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.(12)

















