-சொர்ணலிங்கம் வர்ணன்-
செம்மணி மனிதப் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில் விடுதலை புலிகளே புதைத்தாக கூறி அரசாங்கம் விசாரணைகளை தாமதப்படுத்துவதாக சம உரிமை இயக்கத்தி ன் செயற்பாட்டாளர் சன்னி ஞாஞானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சம உரிமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் செம்மணி புதைகுழிக்கு நீதிகோரி யாழ்.நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் அவர் கூறுகையில், மக்களுக்கு ஆசைகாட்டி,
ஆட்சிக்குவந்த அரசாங்கம், ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மக்களுக்கு வழங்கிய அத்தனை ஆணைகi ளயும் மறந்துவிடுகிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என கூறினார்கள். ஆனால் நீக்க வில்லை இன்றும் அது நடைமுறையில் இருக்கிறது.
இப்போது புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார்கள். மக்கள் அதi ன ஒன்றாக எதிர்க்கவேண்டும். செம்மணி மனிதப் புதைகுழி தோட்டப்பட்டுவரும் நிலையில், அந்த குழி யில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளியாகியுள்ளன.
சுpறுவர்களை புலிகளே புதைத்தாக கூறி அரசாங்கம் விசாரணைகளை மூடிமறைக்க முயற்சிக்கின்றது. தேற்கில் படலந்தை விசாரணைகளை அரசியல் நோக்கில் ஆரம்பித்தவர்கள் இப்போது அதனையும் கி டப்பில் போட்டுவிட்டார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு,
பொய்களை கூறி மக்களை ஏமாற்றினார்கள், இப்படியேதான் 5 வருடகால ஆட்சியை அவர்கள் நகர்த்த ப்போகிறார்கள் ஆகசெம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விச hரணைகளை மேற்கொள்ளாது என அவர் மேலும் தெரிவித்தார்.


















