-த.சுபேசன்-
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 62 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புராண படனப் போட்டி, கதாப் பிரசங்கம், சொற்பொழிவு ஆகிய போட்டிகளை எதிர்வரும் முதலாம் இரண்டாம் திகதிகளில் யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் காலை 8.30 மணி தொடக்கம் நடத்தவுள்ளது.
மேற்படி போட்டிகளுக்கு விண்ணப்பிக்கவுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்கள் தங்கள் முழுப்பெயர், தரம், கற்கும் அறநெறிப் பாடசாலை, வட்சப் இலக்கம் ஆகியவற்றை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னராக 0777197067 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு சைவப்புலவர் சங்கத் தலைவர் சி.கா. கமலநாதன் கேட்டுக கொண்டுள்ளார்.















