டித்வா புயல் தாக்கம் காரணமாக கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
கடற்போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் கடுமையான கடற் கொந்தழிப்பால் இறங்குதுறைப் பகுதிகளின் வீதிகளுக்கு கடல் நுழைந்திருந்தன.

இதனால் இறங்குதுறைப் பகுதியில் கடற்தாவரங்கள் குவிந்து போக்குவரத்துச் செய்யமுடியாத நிலையில் காணப்பட்டன.
ஊர்காவற்றுறை இறங்குதுறையில் குவிந்து காணப்பட்ட கழிவுகளை ஊர்காவற்றுறை பிரதேச சபை பணியாளர்கள், தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்து நேற்றைய தினம் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் துப்புரவு செய்தனர்.
இதேவேளை வீதிகளில் போக்குவரத்து இடையூறாக விழுந்து கிடந்த மரங்களும் அகற்றப்பட்டன.
கடந்த காலநிலை சீரின்மையின் போது ஊர்காவற்றுறைக்குட்பட்ட குளங்களின் மேலதிக நீர் வெளியேற்றம், நலன்புரி முhகாம்களின் குடிநீர் வசதி என பல்வேறு சேவைகளை பிரதேச சபை துரிதமாக செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















