மனைப்பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் (என். வி. கியூ. லெவல் 4) கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைத்தலுக்கான தொழில் தகைமை முறைமை பயிற்சி வகுப்பு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் சங்கிலியன் மன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பாடசாலை கல்வியை நிறைவு செய்த பெண் பிள்ளைகள் இந்தப் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், பயிற்சி பெறுநர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ஊக்குவிப்புத் தொகையாக 300 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியில் இணைய விரும்புவோர் எதிர்வரும் டிசெம்பர் 20ஆம் திகதிக்கு முன்னதாக சங்கிலியன் மன்றத்தில் போதனா ஆசிரியையை தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

















