-க.கனகராசா-
டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் மூவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் 24 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி கரவெட்டி சுகாதார பணிமனையால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தில் கரவெட்டி வடக்கு, கரவெட்டி மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்தான வழக்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் மூவருக்கும் தலா 8 ஆயிரம் ரூபா வீதம் 24 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.


















