-த.சுபேசன்-
தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ கிராமத்தில் தற்காலிக குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு நிலவிரிப்பு மற்றும் தறப்பாள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன.
கிராமத்தின் சமுக மட்ட அமைப்புக்களினுடைய கோரிக்கைக்கு அமைவாக கிராம அலுவலர் பவித்திரா நேரில் சென்று நிலைமைகளை அவதானித்து மேற்படி உதவித்திட்டங்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

















