தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று பல்வேறு பகுதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய வீட்டில் பிரதான நிகழ்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று யாழ்ப்பாணத்திலும் பல்வேறு பிரத்தியேக இடங்களில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மேலாக புலம்பெயர்ந்த தேசங்களில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வருடம் பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் வல்வெட்டித்துறை மண்ணில் அவரது இல்லத்திற்கு முன்பாக நடைபெற்றிருந்தது. இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேக்கினை வெட்டி ஏராளமானவர்களுடன் பிறந்தநாள் நிகழ்வினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















