-சி.ஜெகதீஸ்வரன்-
பிறந்து 9 மாதங்களேயான குழந்தை திடீரென வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் இளவாலை – உயரப்புலம் பகுதியை சேர்ந்த 9 மாத ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
நேற்று அதிகாலை 12.30 மணியளவில் குழந்தை, திடீரென வாந்தி எடுத்த நிலையில் நோயாளர் காவுவண்டியின் ஊடாக சங்கானை பிரதேச வைத்தியசா லைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை இளவாலை பொலிஸார் நெறிப்படுத்தினர். உயிரிழந்த ஆண் குழந்தையுடன் இரட்டைக் குழந்தையாக பிறந்த பெண் குழந்தை, கடந்த 4 ஆம் மாதம் முதலாம் திகதி உயிரிழந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.


















