-இ.கலைஅமுதன்-
வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை யாழ். மாநகரசபை முதல்வர் தலைமையிலான குழுவினர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர்.
திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை உள்ளூராட்சி சபைகள் எதிர்கொண்டு வரும் நிலையில் பெரும் செலவில் உருவாக்கப்பட்டு வடமராட்சி முள்ளிப் பகுதியில் உள்ள திண்மக் கழிவகற்றல் நிலையம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியை யாழ். மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொண்டனர்.
வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் யாழ். மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா உள்ளிட்ட குழுவினருக்கு திண்மக்கழிவு முகாமைத்துவக் கட்டமைப்பின் தொழிற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.


















