-சி.ஜெகதீஸ்வரன்-
திருமணம் நிறைவேறாத விரக்தியால் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் குமரபுரம் கோண்டாவிலைச் சேர்ந்த லோகநாதன் ஜெயராஜ் (வயது-31) என்பவராவார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















