அராலி கிழக்கு மலையாளங்காடு ஜயனார் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
பரஞ்சோதி முனிவர் குருபூஜையை அடுத்து மாணவர்களின் கலை நிகழ்வும் இளஞ்சைவப் புலவர் ச. நவநீதனின்
‘சோழணை மடுவில் வீட்டிய படலம்’ எனும் சொற்பொழிவும் இடம்பெறும். சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.


















