-செ.ரவிசாந்-
மூத்த பொதுவுடைமைவாதியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஆரம்பப் பொதுச் செயலாளருமான மறைந்த கே.ஏ.சுப்பிரமணியத்தின் 36 ஆவது ஆண்டு நினைவாக தேசிய இனங்களின் பிரச்சினைகளும் தீர்வுக்கான முன்மொழிவுகளும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கே.ஏ.சுப்பிரமணியம் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில் மூத்த இடதுசாரியும், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளருமான சி.கா.செந்திவேல் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் ஆசிரியரும், அரசியல் செயற்பாட்டாளருமான மாத்தளை டேவிட் சுரேன், சமூக செயற்பாட்டாளரான திருமலை முரளிதரன் மயூரன், ஆசிரியரும், ஆசிரியத் தொழிற்சங்கச் செயற்பாட்டாளருமான கே.ஜிந்தீசன், அரசியல், சமூகச் செயற்பாட்டாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் ஆகியோர் கருத்துரைகள் நிகழ்த்துவர். அரசியல், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















