-க.கனகராசா-
தேசிய மட்ட தட்டெறிதல் போட்டியில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சிவகுமார் பிரகாஸ்ராஜ் புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
35 ஆவது தேசிய இளைஞர் அகில இலங்கை தேசிய மெய்வல்லுநர் போட்டி தியகம மஹிந்தராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவனும், பருத்தித்துறை ஐக்கிய இளைஞர் கழக வீரருமான சிவகுமார் பிரகாஸ்ராஜ் யாழ். மாவட்ட இளைஞர் அணியை பிரதிநிதித்துவம் செய்து, 46.52 மீற்றர் தூரம் எறிந்து, புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
2023 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட இளைஞர் அணியை பிரதிநிதித்துவம் செய்த மிதுன்ராஜ் அவர்களினால் நிலைநாட்டப்பட்ட 44.80 மீற்றர் சாதனையை இவர் முறியடித்துள்ளமை குறிப்பிடத்கக்கது.


















