அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ஆண்கள் பிரிவில் தேசிய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப்பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இலங்கையில் விளையாட்டில் அதிக பதக்கங்களை வென்ற பாடசாலைகளில் முன்னணியில் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.




















