நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று வெள்ளிக்கிழமை தையிட்டிக்கு விஜயம் செய்தனர்.
இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து, தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில், குறித்த குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.


















