-இ.கலைஅமுதன்-
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மக்களுக்கு சொந்தமானது. அந்த காணிகளை மக்களிடம் வழங்கவேண்டும் என்பதை தாம் அரசாங்கத்திற்கு கூறியுள்ளதாக யாழ். ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்மதேரர் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ விகாரை சர்ச்சை தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, மேலும் அவர் கூறுகையில், விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலம் மக்களுக்கு சொந்தமானது. அதனை நீதி அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் அரசாங்க தரப்புகளுக்கும் நான் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன். ஆகவே இந்த விடயத்தை அரசியலாக்கி முரண்பாடுகளை வளர்க்கவேண்டாம் என தமிழ், சிங்கள மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கவேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என தெரிவித்தார்.


















