-த.அம்பிகாவதி-
வடமராட்சி கிழக்கில், மாமுனை தொடக்கம் கட்டைக்காடு வரையிலான கடற்கரை வீதியோரங்களில் நச்சுப்பாம்புகள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவதானமாக நடந்துகொள்ளுமாறு அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் மக்களிடம் கோரியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் உருவாகிய குப்பைகள், பருத்தித்துறை பிரதேச சபையால் அகற்றப்பட்ட வேளையில் குறிப்பாக மாமுனை தொடக்கம் தாளையடி வரையான பகுதியில் பெருமளவான நச்சுப் பாம்புகள் அவதானிக்கப்பட்டன.
எனவே, குறிப்பாக இரவு வேளையில் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள், அவதானத்துடன் நடந்து கொள்வது அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


















