நல்லூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சிவகரன் நேற்றைய தினம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடமிருந்து தமக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
இவர் முன்னர் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.


















