டிசம்பர் முதல் வாரத்தில் நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.
இது குறித்து பயணிகள் கப்பல் சேவையை நடத்தும் சுபம் பெர்ரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தது.
நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்குமிடையில் சேவையில் ஈடுபட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக மோசமான வானிலை ஏற்படும் என்பதால் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில்,தற்போது காலநிலை மாறுபாடுகளின் காரணமாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள புயல் தாக்கத்தால் காங்கேசன்துறைமுகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்கும் பணி நடந்து கொண்டு இருப்பதாலும் பயணிகள் கப்பல் சேவை திகதியை அந்நிறுவனம் பிற்போட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
















