• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Monday, October 5, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் – சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல்!

Yarl Thinakkural by Yarl Thinakkural
December 26, 2025
in இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள், நிகழ்வுகள், நினைவஞ்சலிகள்
0
நாடளாவிய ரீதியில் – சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல்!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன.

இந்த நினைவு நாளை முன்னிட்டு, ‘தேசிய பாதுகாப்பு தினத்தின்’ முக்கிய நினைவு நாள் காலியில் உள்ள ‘பேரலிய சுனாமி நினைவிடத்தில்’ நடைபெற்றதுடன், நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். உடுத்துறை

21 ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், ஆகியோர் மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி

சுனாமி ஆழிப்பேரலையின் நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

தேசியக்கொடி கொடி ஏற்றலுடன், சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. .

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எஸ்-முரளிதரன், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ்மா அதிபர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா

வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் சுனாமி பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டதோடு டித்வா புயலினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி சுடரினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் ஏற்றி வைத்தார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

அந்தவகையில், உயிரிழந்தவர்களின் உறவுகள், தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.

கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மேகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் இணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, சுனாமி பேரலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

புதுக்குடியிருப்பு

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்இ சுனாமியால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தயாரான மைக்கல் றெசிலின் ராணி அவர்களால் பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மதகுருமார்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், வினோநோதாரலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான சி.குகனேசன், சி.வேதவனம், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை – மூதூர்

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் ஆழிப்பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், அவர்களின் ஆன்மா சாந்திக்காக பிரார்த்தனை நிகழ்வு மூதூர் தக்வா நகர் ஏ.சி.பள்ளிவாசலில் காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வு ஈராக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

திருகோணமலை – பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம்

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இன்று திருகோணமலை – பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் பிரதேச செயலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மட்டு. ஓந்தாச்சிமடம்

மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர்.

இதன்போது, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஏனைய கிராம மட்ட பொது அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று

தேசிய பாதுகாப்பு தினமும், சுனாமி ஆழிப் பேரலையின் நினைவு தினமும் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தம்பலகாமம்

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியுடன் இறை வணக்கமும் நடைபெற்றது. இதன் போது சுனாமி தொடர்பிலான நினைவு பேருரையும் இடம் பெற்றதுடன் திட்வா புயல் அனர்த்தம் தொடர்பிலான நினைவுகளும் பேருரைகளான பிரதேச செயலாளர் உரையாற்றினார்.

இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஹட்டன்

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர், ஊழியர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஹட்டன் நகர சபை பிரிவு குடியிருப்பாளர்கள் இணைந்து சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இம்முறை தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமி பேரழிவினால் மட்டுமன்றி ஏனைய அனர்த்தங்களினாலும் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டனர்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

இம்முறை இயக்கப்படாத – ரயில் என்ஜின்!

Next Post

8.6 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்களுடன் வர்த்தகர்கள் கைது

Related Posts

போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது!
இலங்கை செய்திகள்

போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது!

October 3, 2026
யாழில். முன்னெடுக்கப்படவுள்ள போக்குவரத்து அபிவிருத்தி திட்டங்கள்
இலங்கை செய்திகள்

யாழில். முன்னெடுக்கப்படவுள்ள போக்குவரத்து அபிவிருத்தி திட்டங்கள்

October 3, 2026
அமெரிக்க தடை எச்சரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்!
இலங்கை செய்திகள்

அமெரிக்க தடை எச்சரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்!

October 3, 2026
SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து
இலங்கை செய்திகள்

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

October 1, 2026
ரணிலின் பாதுகாப்பாளர் மீதான தாக்குதல் – ஔிப்பதிவாளருக்கு பிணை!
இலங்கை செய்திகள்

ரணிலின் பாதுகாப்பாளர் மீதான தாக்குதல் – ஔிப்பதிவாளருக்கு பிணை!

October 1, 2026
Next Post
8.6 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்களுடன் வர்த்தகர்கள் கைது

8.6 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்களுடன் வர்த்தகர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

September 16, 2026
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
தேர்தல் பிரசாரத்தில் பெண்களை உருவகேலி செய்வதா? மு.க. ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கண்டனம்…

தேர்தல் பிரசாரத்தில் பெண்களை உருவகேலி செய்வதா? மு.க. ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கண்டனம்…

October 3, 2026
போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது!

போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது!

October 3, 2026
“Instagram is for girls!” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க்

“Instagram is for girls!” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க்

October 3, 2026
இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

October 3, 2026

Recent News

தேர்தல் பிரசாரத்தில் பெண்களை உருவகேலி செய்வதா? மு.க. ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கண்டனம்…

தேர்தல் பிரசாரத்தில் பெண்களை உருவகேலி செய்வதா? மு.க. ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கண்டனம்…

October 3, 2026
போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது!

போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது!

October 3, 2026
“Instagram is for girls!” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க்

“Instagram is for girls!” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க்

October 3, 2026
இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

October 3, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • தேர்தல் பிரசாரத்தில் பெண்களை உருவகேலி செய்வதா? மு.க. ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கண்டனம்… October 3, 2026
  • போதைப்பொருள் வழக்குகள்: 8-14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 9,000 பேருக்கு மேல் கைது! October 3, 2026
  • “Instagram is for girls!” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எலான் மஸ்க் October 3, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.