-ஞானத்தமிழ்-
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நடாத்தும் நாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் யா.பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரி ஆசிரியர் ந.குகபரன் சிறப்புரை நிகழ்த்தவுள்ளதுடன் மற்றும் காரை கிழவன்காடு கலாமன்ற இசை ஆசிரியர் திருவாசகக்குயில் லீலாவதி இராசரத்தினம் திருமுறை அர்ப்பணம் நிகழ்த்தவுள்ளார்.
















