-கஜிந்தன்-
உலக நீரிழிவு தின நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வின் போது நீரழிவு நோய், உயர் குருதி அமுக்கம், கொலஸ்திரோல் ஆகிய மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் செல்லத்துரை பிரசாத் யாழ் நீரழிவு கழகத்தினரால் கௌரவிக்கப்பட்டார். கண் வைத்திய நிபுணர் வைத்தியர் எம்.மலரவன், சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பீ.பாலகோபி, யாழ். நீரழிவு கழகத்தின் தலைவர் தி.மைக்கல் ஆகியோர் அவருக்கு மலர்மாலை அணிவித்து கௌரவித்தனர்.

இதன்போது வைத்தியர் செ.பிரசாத்தினால் 300 புத்தகங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















