-த.சுபேசன்-
சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் வட்டார தேவாலய வீதி புனரமைப்பு பணி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நகரசபை உறுப்பினர் மு. கோகுல்றாஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நகராட்சி மன்ற உபதவிசாளர் ஞா.கிஷோர் கலந்து கொண்டு புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
நுணாவில் மற்றும் மறவன்புலவு கிராமங்களை இணைக்கின்ற வீதியாக மேற்படி வீதி காணப்படுகின்றது. அத்துடன் கொல்லங்கராய் இந்து மயானத்திற்கும், வயல் நிலங்களுக்கும் பயணிக்கின்ற இந்தவீதி நீண்ட காலமாக சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நகரசபை உறுப்பினர் கோகுல்றாஜின் முயற்சியில் நகராட்சி மன்றத்தின் சுமார் 6.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வீதி மற்றும் அதனோடு இணைந்த குளக்கரைக் கட்டு என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















