-க.கனகராசா-
டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு 106,000 தண்டப்பணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபையின் ; (J/393, J/383) மற்றும் பருத்தித்துறை நகரசபையின் (J/409) கிராமசேவையாளர் பிரிவுகளில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நுளம்பு பெருகக் கூடியவாறான சூழலினை வைத்திருந்த 14 ஆதன உரிமையாளர்களிற்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஷ் என்பவரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது அன்றையதினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் பருத்தித்துறை மன்றினால் ஆதன உரிமையாளர்களிற்கு மொத்தமாக 106,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.


















