-செ.ரவிசாந்-
எழுத்தாளர் இரா.சடகோபன் எழுதிய ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு இன்று சனிக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் கோபாலகிருஷ்ணன் பிரவீன்ராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் ஆசி உரையையும், அபிநயா சிவகுமார் நூல் அறிமுகவுரையையும் ஆற்றுவர். எழுத்தாளர் இரா.சடகோபன் ‘ தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வில் மலையக மக்கள்’ எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துவார். இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















