-க.சபேஷன்-
சாத்தியமற்றதென எதுவும் இல்லை. நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கின்ற விடயங்களை நிறைவு செய்து கொடுக்க யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்துச் சேவை தயாராக இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவின் பேருந்து நிலைய கள விஜயம் குறித்து கருத்துக் கூறும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நெடுந்தூர பேருந்து சேவை நிலையத்தில் இருந்து இணைந்த சேவையை நடத்த தடைகள் சில இருப்பதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக சி.சி.ரி.வி பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் மலசலகூட விரிவாக்கம் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றது.
நாம் இணைந்த சேவையை சாத்தியமாக்கி மக்களுக்கு இலகுவான அசௌகரியமற்ற சேவையை வழங்கவே விரும்புகின்றோம்.
அதனடிப்படையில் சுட்டிக்காட்டப்படும் தேவைப்பாடுகளை எமது சங்கம் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


















