-க.கனகராசா-
26ஆவது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டியில் பதக்கங்களை கைப்பற்றிய செல்வராஜா ரமணனுக்கான பாராட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
நடேஸ்வரா கல்லூரி சமூகமும் காங்கேசன்துறை சமூகமும் இணைந்து இந்தியாவில் நடைபெற்ற 26ஆவது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டியில் 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் ஒரு தங்கப் பதக்கம் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களைக் கைப்பற்றி நாட்டுக்கும் மாவட்டத்துக்கும் ஊருக்கும் பெருமை சோர்த்த காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி பழைய மாணவன் செல்வராஜா ரமணன் கௌரவிக்கவுள்ளன.
கே.மனோகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் பி.முகுந்தன், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.செந்தில்குமரன், நடேஸ்வரா கல்லூரி அதிபர் பி.பாலகுமார், நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் வி.சுதர்சன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


















