-ஞானத்தமிழ்-
பனைசார் உற்பத்தியில் ஈடுபடுவோர் மற்றும் பதப்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டுக்கான பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பனை சார்பான உற்பத்திகளில் ஈடுபடும் அனைவரும் மற்றும் பனை சார் உற்பத்தி பதப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வோரும் பதிவு செய்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுகளை www.pdb.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக மேற்கொள்ள முடியும். மேலதிக தகவல் களை பனை அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகங்களிலும் கண்டி வீதி, நாவற்குழியில் உள்ள தலைமை அலுவலகத்திலும் நேரடியாக அல்லது 0212222034 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


















