-க.கனகராசா-
சாவகச்சேரி நகராட்சி மன்ற மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சாவகச்சேரி, பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர், வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலர் எப்.சி. சத்தியசோதி, சிறப்பு விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி இ. அபிராமி, கௌரவ விருந்தினர்களாக மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் திருமதி சுதாமதி தயாபரன், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பிரதி அதிபர் திருமதி கஜேந்தினி மகிந்தன், மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலையின் பதில் அதிபர் கந்தசாமி சத்தியானந்தன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
விசேட நிகழ்வாக ‘மாந்துளிர்’ எனும் நூல் வெளியீடு இடம்பெற உள்ளது. அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















