-சி.ஜெகதீஸ்வரன்-
தமிழ் அமுதம் அமைப்பின் முதலாவது வெளியீடாக தயாரிக்கப்பட்டிருக்கும் 46 ஆயிரம் தமிழ்ப் பெயர்த் தொகுப்பு நூலின் அறிமுக நிகழ்வு பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் பருத்தித்துறை சூரியமகால் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
தமிழ் அமுதம் தமிழ்ப் பணிக்குழுவை சேர்ந்த வெற்றி அரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கலைத்துறை பீடாதிபதி பேராசிரியலர் எஸ்.ரகுராம் நூலின் அவசியம் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.
இதையடுத்து பண்டிதர் பரந்தாமனின் மகள் மருத்துவர் முல்லை தமிழ்ப்பெயர்த் தொகுப்பு நூலின் பிரதிகளை வழங்கி வைத்தார். நூலின் முதற் பிரதியினை பேராசிரியர் எஸ்.ரகுராம் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை வர்த்தகர் சங்க நிர்வாகத்தினர், தமிழ் அமுதம் தமிழ் பணிக்குழு செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் அமுதம் அமைப்பின் முதலாவது வெளியீடாக தயாரிக்கப்பட்டிருக்கும் குறித்த நூல் அண்மையில் கிளிநொச்சி பண்பாட்டு நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















