-சபையில் ஏகமனதாக நிறைவேறியது தீர்மானம்-
-சி.ஜெகதீஸ்வரன்-
பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்வது என்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.
யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கும், மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வு ஆரம்பமானது.
இதன்போது, பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், அதனால் மாணவர்கள் உட்பட சிறுவர்கள் புகை மது பழக்கத்தில் ஈடுபடுவதாகவும், இராணுவம் தமது பாதுகாப்பு வேலைகளில் மட்டும் ஈடுபட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, ஆளும் எம்.பி.பி கட்சியினரும் சபையில் அமர்ந்திருந்து தீர்மானத்திற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















