-வாழை இலைகளை பயன்படுத்த அறிவுறுத்து-
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களில் ஜனவரி மாதத்திலிருந்து லஞ்ச்சீற் பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.
இந்தத்தடை ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் நகரசபை அறிவித்துள்ளது.
உணவக உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லஞ்ச் சீற்றுகளுக்குப் பதிலாக வாழை இலைகள், தாமரை இலைகள், தேக்கு இலைகள் போன்றவற்றையும் உணவு பொதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட அலுமினியத் தகடு மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கொள்கலன்களையும் பயன்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீது, நகராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தின் கீழ் சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் வணிக உரிமைப் பத்திரங்களை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


















