பருத்தித்துறை நகரசபையின் அமர்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நகசபைத் தலைவர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பேரவையின் 5 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை (ஊசி) உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர்.
தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபி.டி.பி. ஆகியவற்றை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தனர். இதையடுத்து ஒரு மேலதிக வாக்கினால் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச்சபை அமர்வின்போது வல்வெட்டித்துறை நகரசபை செயலாளர் சத்தியநாதன் கிஷோக்குமார் பதில் செயலாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















