யாழில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை நாகர் கோவில் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூக விரோதிகள் போல சித்தரித்து வெளியேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா விமானப் படையினரின் குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் 22 ஆம் திகதி பலியான மாணவர்களின் நினைவுத்தூவியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூக விரோதிகள் போல சித்தரித்து வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் நாகர் கோவில் பகுதியில் உள்ள பாடசாலையான நாகர் கோவில் மகாவித்தியாலயத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது பாடசாலை வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் பாடசாலை ஆசிரியர்கள் இவ் நினைவேந்தலுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த நிலையில் பெரிய வாக்குவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


















