சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஆம் ஆண்டில் கீழ்வரும் பாடநெறிகளை (பகுதி நேரமாக) கற்பிப்பதற்கான வளவாளர்களை (ஆசிரியர்கள்) இணைத்துக்கொள்ளவதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
சங்கானைப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையை (தொலைபேசி இலக்கம் உள்ளடங்கலாக) 03.12.2025 ஆம் திகதிக்கு முன்பதாக ‘கலாசார மத்திய நிலையம், பட்டினசபை வீதி, சங்கானை’ எனும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மற்றும் கிராமிய சங்கீதம், பரத மற்றும் கிராமிய நடனம், சித்திரம் மற்றும் ஓவியக் கலை ஆகிய பயிற்சி நெறிகளுக்கே வளவாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
















